மீன் பிடி தடை காலம், கேரள மீன் வரத்து குறைவு எதிரொலி: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு,
2022-05-22@ 17:29:43

தொடர்மலை மீன்பிடி தடை காலம் கேரள மீன் வரத்து குறைவால் கோவையில் மீன்கள் வில்லை அதிகரிதுள்ளது, கோயம்பத்தூர் லாரிப்பேட்டை மீன் சந்தைக்கு மீன்கள் வரத்து குறைந்துள்ளது, 10 லாரிகள் வரவேண்டிய இடத்தில் 3 லாரி மீன்களே வந்துள்ளன இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்கள் விலை கிடுகிடு என உயர்ந்து காணப்படுகிறது. வஞ்சிரம் மீன் சென்ற வரம் கிலோ ரூ.800 முதல் 900 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1300 முதல் 1400க்கு வரை அதிகரித்து விற்கப்படுகிறது.
வவ்வால் மீன் கிலோ ரூ. 700க்கு முதல் 800 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ 1000 க்கு விற்கப்படுகிறது, இயிலை, மாத்தி, நெத்திலி உள்ளிட்ட அனைத்து மீன்களும் வழக்கத்தைவிட அதிகப்படியான விலை உயர்வினால் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் குறைத்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர், மீன்பிடி தடை காலம் நீடித்துவருவதால் தான் சென்னை காசிமேட்டிலும் பெரிய வகை மீன்ளுக்கு தட்டுப்பாடு நிலவியது ஞாயிறுகிழமை என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் எராளமானோர் காசிமேடு மீன் பிடி சந்தைக்கு மீன்களை வாங்க வந்து குவிந்தனர். இதனால் வழக்கத்தைவிட மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
சிறிய வகை வஞ்சிரம் கிலோ ரூ. 700 க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ. 1300 க்கு விற்பனை செய்யப்படுகிறது சங்கரா மீன் கிலோ ரூ .400க்கு இருந்து ரூ. 800 க்கு விற்பனையாகிறது, கிலோ ரூ. 700க்கு விற்கப்பட்ட வவ்வால் ரூ. 1200 ஆக உயந்துள்ளது. பாறை கிலோ ரூ. 600 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ. 1100 க்கு விற்பனையாகிறது கிலோ ரூ. 400 க்கு விற்கப்பட்ட இறால், ஒரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ. 800 க்கு விற்பனையாகிறது.
மேலும் செய்திகள்
எனது அறக்கட்டளைக்கு அனுப்பிய பணம் எவ்வளவு? பாடலாசிரியர் சிநேகன் மீது நடிகை ஜெயலட்சுமி புகார்
50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்; போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்
சிகிச்சைக்காக 976 நாட்கள் விடுமுறை எடுத்த தலைமை காவலருக்கு மீண்டும் பணி
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!