கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
2022-05-22@ 11:22:55

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் நீள்வடிவ தாயகட்டை, சுடுமண் பொம்மை, பாசிகள், பானை ஓடுகள், வட்ட சில்லுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த வாரம் நீளமான சுடுமண் செங்கல் சுவற்றின் இருபுறமும் பெரிய சிவப்பு நிற பானைகள கண்டறியப்பட்டன. இந்த சுவற்றின் அருகில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சிய பின் வெளியாகும் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இடத்தில் இரும்பு தொழிற்சாலை இயங்கி இருக்க கூடும் என தெரிகிறது.
மேலும் சுவற்றின் அருகில் சிறிய சுடுமண் பானைகள் கிடைத்துள்ளன. கீழடியில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டு 500க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் 5ம் கட்டத்தில் மணலூரிலும், 6ம் கட்டத்தில் கீழடியிலும் இது போன்ற உலைகலன் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!