மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு 172 பேர் பயணம் வாராந்திர சிறப்பு மலை ரயில் இயக்கம்
2022-05-22@ 11:19:23

மேட்டு்ப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாராந்திர சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. மலைகளின் அரசியான நீலகிரியின் இயற்கை அழகை காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் கோடை காலங்களில் நீலகிரிக்கு சுற்றுலா வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான மலை ரயிலில் பயணித்து மகிழ்வார்கள்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து 208 வளைவு, 16 குகை, 250 பாலங்களை மலை ரயில் கடந்து செல்லும். இயற்கை காட்சிகளுடன் ஜில்லென்ற காற்று, மலர் வாசனையுடன் மூலிகை நறுமணங்களை அனுபவித்தவாறு ஊட்டிக்கு 5 மணி நேரம் செல்லும் இந்த பயணம் புதிய அனுபவமாக இருக்கும். கொரோனாவால் 2 ஆண்டு முடக்கத்திற்கு பின்னர் இந்த ஆண்டு நீலகிரிக்கு உலகம் முழுவதிலும் இருந்தும் அதிக சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து தென்னக ரயில்வே மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கோடைகால சிறப்பு வாராந்திர மலை ரயிலை இயக்க முடிவு செய்தது. அதன்படி நேற்று (21ம் தேதி) முதல் ஜூலை 22ம் தேதி வரை 2 மாதங்களுக்கு வாரம் ஒருமுறை சிறப்பு மலை ரயிலை இயக்க முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 172 பயணிகளுடன் ஊட்டிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘‘வழக்கமாக ஒரு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் டிக்கெட் கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. தற்போது கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் டிக்கட் எளிதாக கிடைத்தது. குடும்பத்துடன் மலை ரயில் பயணம் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சிறப்பு மலை ரயில் வாரம் ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. கோடைகால சீசனையொட்டி நாள்தோறும் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும். குறைந்த பட்சம் மலர் கண்காட்சிக்காக வரும் 24ம் தேதி வரையிலாவது நாள்தோறும் இயக்க வேண்டும். அதன்பின்னர் விடுமுறை நாளான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலை ரயிலை இயக்க வேண்டும்’’ என்றனர்.
கட்டணம் விவரம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கமான மலை ரயில் கட்டணம் முதல் வகுப்பிற்கு நபர் ஒருவருக்கு ரூ.600ம், 2ம் வகுப்பில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ. 295ம் வசூலிக்aகப்படுகிறது. ஆனால் கோடைகால வாராந்திர சிறப்பு மலை ரயில் கட்டணம் முதல் வகுப்பிற்கு நபர் ஒருவருக்கு ரூ. 1575ம், 2ம் வகுப்பிற்கு நபர் ஒருவருக்கு ரூ.1065ம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சி. திருவள்ளூர், செங்கல்பட்டு கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றினர்
உசிலம்பட்டி அருகே ஒரு மிலிட்டரி கிராமம்; நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்: தலைமுறை தலைமுறையாக தொடரும் வீரவரலாறு
பொதுமக்களை கவரும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; ஜலகாம்பாறை பகுதியில் இருந்து மரம் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: நின்றபடி பைக் ஓட்டி வாலிபர் சாகசம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!