தருமபுர ஆதீனத்தில் குருபூஜை விழா: நாற்காலி பல்லக்கில் ஆதீனகர்த்தர் குருமூர்த்தங்களில் எழுந்தருளல்
2022-05-22@ 11:17:05

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் குருமூர்த்தங்களுக்கு எழுந்தருளி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த பழமையான தருமபுரம்ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. நேற்று 21ம் தேதி காலை கமலைஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது.
ஆதின மரபு படி நேற்று தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ல மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஆதீனத்தை நாற்காலி பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்யவதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சன்னிதானம் குருவாக பாவிப்பதால் நாற்காலி பல்லக்கில் அமரவைத்து குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு செய்வது மரபு என கூறப்படுகிறது, அதனடிப்படையில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார்.
மேலும் செய்திகள்
12 அடி அகலம், 32 அடி நீள தேசிய கொடி உருவாக்கி மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை
விடுதியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்: ஊத்தங்கரையில் போலீஸ் குவிப்பு
திருத்தணி அருகே வீடுகள் இடிப்பை கண்டித்து பொது மக்கள் மறியல்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சமரசம்
உத்திரமேரூரில் ரூ.21 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்; சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
இலவச கால்நடை மருத்துவமுகாம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!