‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
2022-05-22@ 01:42:51

நீமுச்: மனநிலை பாதித்தவரை பாஜ பிரமுகர் கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டம், சார்சி கிராமத்தை சேர்ந்தவர் பவர்லால் ஜெயின். மனநிலை பாதித்தவர். கடந்த 15ம் தேதி ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கார் என்ற இடத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்ற பவர்லால் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்புரா ரோடு பகுதியில் பவர்லால் ஜெயினின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்த பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர்தான் ஒருவர் பவர்லால் ஜெயினிடம், ‘உன் பெயர் என்ன? முகமது தானே. உன்னுடைய ஆதார் அட்டையை காட்டு,’ என்று கூறி முதியவரை கன்னத்தில் திரும்ப திரும்ப அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவர்லாலின் குடும்பத்தினர் உடனே காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பானதையடுத்து மானசா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முதியவரை அடித்த நபரை குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் மானசாவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பது தெரிந்தது. காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் பாஜவை சேர்ந்தவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
Tags:
‘Your name is Mohammad Thane ...’ mood assaulted BJP executive ‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை தாக்கிய பாஜ நிர்வாகிமேலும் செய்திகள்
இளநிலையில் இருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற அனுமதி பெற தேவையில்லை: யுஜிசி அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 99 பேருக்கு கொரோனா உறுதி: உயிரிழப்பு இல்லை.! ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!