தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 90 அணைகளின் நீர்மட்டம் 146 டிஎம்சியாக உயர்வு: நீர்வளத்துறை அதிகாரி தகவல்
2022-05-21@ 00:54:24

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், மாநிலம் முழுவதும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 93 டிஎம்சி (120 அடி) கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை 82 டிஎம்சியாகவும் (112 அடி), 32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 16.5 டிஎம்சியாகவும்,
4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 1.5 டிஎம்சியாகவும், 10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் 4.8 டிஎம்சியாகவும், 6.09 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 5.1 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 1.2 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொாள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 2.4 டிஎம்சியும் நீர் இருப்பு உள்ளது. இதுபோல, 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 3.8 டிஎம்சியும், 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 0.831 டிஎம்சியாகவும்,
1.66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.4 டிஎம்சி ஆகவும், 7.32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 1.36 டிஎம்சியாகவும், 5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 0.4 டிஎம்சியாகவும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 7.5 டிஎம்சியாகவும், 3.86 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 1.91 டிஎம்சியாகவும், 1.74 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 0.69 டிஎம்சி என மொத்தம் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளில் 146 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...