தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 37 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழப்பு இல்லை: 44 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
2022-05-20@ 19:39:13

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 315 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 44 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 461 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 20 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சவுதியில் இருந்து வந்த ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!