டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதால் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு
2022-05-20@ 17:06:27

சென்னை: டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதால் காயமடைந்தவருக்கு தெற்கு ரயில்வே 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மாநில நுகர்வோர் ஆணையம் உறுதி செய்துள்ளது. விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன், 1998-ம் ஆண்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு செல்ல முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்துள்ளார். இந்தநிலையில் முன்பதிவில்லாத பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பதிவு பெட்டியில் பயணிக்க டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி கோரி உள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர், மாரியப்பனை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம் மாரியப்பனுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேயிக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தெற்கு ரயில்வே, மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு செய்த நிலையில், மனுவை விசாரித்த ஆணையம், 10 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்துள்ளது.
மேலும் செய்திகள்
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் ரூ.378 கோடியில் வீடு, கட்டிடங்கள் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார்
விவசாயிகள், தொழில்துறைக்கு அடுத்த ஆபத்து கூறுபோடப்படும் மின்துறை
எனது அறக்கட்டளைக்கு அனுப்பிய பணம் எவ்வளவு? பாடலாசிரியர் சிநேகன் மீது நடிகை ஜெயலட்சுமி புகார்
50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!