பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!
2022-05-20@ 14:49:21

திருவனந்தபுரம்: பிரபல மலையாள திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. நடிகர் விஜய் பாபு தயாரித்த படங்களில் நடித்த இளம் நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கேரள காவல்துறையில் புகார் அளித்தார். அதில் விஜய் பாபு தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தெரிவித்ததுடன் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார்.
இதையடுத்து பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கேரள காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், விஜய் பாபு, அரபு நாடு ஒன்றுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. சர்வதேச காவல்துறையின் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்து இந்தியா கொண்டுவர காவல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா... 72 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
ரூ.215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி: குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்
தவுசன்ட் வாலா, ஜிலேபி பாக்ஸ் டண்டணக்கா ஆன கதையை சொல்கிறார் wiki: யானந்தா
அவங்க எங்கே... நாம எங்கே... அமெரிக்கா ஓட்டலில் ஜெய்சங்கர் ஆச்சர்யம்: சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ
உள்ளூர் வியாபாரிகளுக்கு நற்செய்தி பழையபடி ரயில் பயணத்தில் பொருட்களை விற்க அனுமதி: ரயில்வே புதிய திட்டம்
1-4 வயது குழந்தைகளுக்கு டிக்கெட் தேைவயில்லை: ரயில்வே விளக்கம்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!