நெமிலியில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்-கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
2022-05-20@ 14:16:26

நெமிலி : நெமிலி பகுதிகளில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டு மற்றும் ஏணியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் போதிய இடம் இல்லாததால் மாணவ, மாணவிகள் பஸ்சின் படிக்கட்டு மற்றும் பின்புறத்தில் உள்ள ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
குறிப்பாக, நெமிலியில் இருந்து காஞ்சிபுரம், பாணாவரம் செல்லும் பஸ்கள், அரக்கோணத்தில் இருந்து நெமிலி வழியாக வேலூர் செல்லும் பஸ், பனப்பாக்கத்தில் இருந்து திருமால்பூர் செல்லும் பஸ் ஆகியவற்றில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்களால் கூட்ட நெரிசல் அதிகரித்து, படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. சில இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் நன்மை கருதி இந்த வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
சிதம்பரம் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு; தண்ணீரில் தத்தளிக்கும் 150 கிராமங்கள்
அடிப்பாலாறு பகுதியில் அத்துமீறல்; தமிழக மீனவர்களை தாக்கிய கர்நாடக வனத்துறையினர்
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்
எடப்பாடி பழனிசாமி பேச்சு; அதிமுகவை மற்றவர்களால் உடைக்க முடியாது
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முறைகேடு தவிர்க்க வழிகாட்டுதல் அமல்; ஐகோர்ட் கிளை உத்தரவு
ஸ்டிரெச்சரை வெளியே கொண்டு சென்றதால் சாவு; மூதாட்டியிடம் கம்மல் திருட முயன்ற ஊழியர் சஸ்பெண்ட்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!