அணைக்கட்டு தாலுகாவில் 2ம் நாள் ஜமாபந்தியில் உதவி கேட்டு 140 பேர் மனு-உடனடி தீர்வு காண உத்தரவு
2022-05-20@ 12:50:39

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தியின் இரண்டாம் நாளான நேற்று ஊசூர் உள்வட்டத்திற்குட்ட ஊசூர், பூதூர், சேக்கனூர், தெள்ளூர், புலிமேடு, அத்தியூர், குப்பம், முருக்கேரி, செம்பேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தீர்வாய மேலாளர் பாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி, மண்டல துணை தாசில்தார்கள் திருக்குமரேசன், மெர்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் விநாயகமூர்த்தி வரவேற்றார். இதில் அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘அத்தியூர் ஊராட்சியை சேர்ந்த நாங்கள் பூதூர் எல்லையில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். வீட்டு மனைபட்டா இல்லாததால் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. சிறப்பு மனுநீதி நாளில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தற்போது அங்கு வீடு கட்டி வசித்து வரும் 53 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்ற அலுவலர் ராமகிருஷ்ணன் இடத்தின் வகைபாடு குறித்து விசாரனை நடத்தி உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தாசில்தார், சர்வேயர்களுக்கு உத்தரவிட்டார். இதேபோல் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட பல நல திட்ட உதவிகள் கேட்டு 140 பேர் மனு அளித்தனர். இதில் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், விஏஓக்கள் சங்கர்தயாளன், தமிழ், அசோக், அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சிதம்பரம் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு; தண்ணீரில் தத்தளிக்கும் 150 கிராமங்கள்
அடிப்பாலாறு பகுதியில் அத்துமீறல்; தமிழக மீனவர்களை தாக்கிய கர்நாடக வனத்துறையினர்
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்
எடப்பாடி பழனிசாமி பேச்சு; அதிமுகவை மற்றவர்களால் உடைக்க முடியாது
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முறைகேடு தவிர்க்க வழிகாட்டுதல் அமல்; ஐகோர்ட் கிளை உத்தரவு
ஸ்டிரெச்சரை வெளியே கொண்டு சென்றதால் சாவு; மூதாட்டியிடம் கம்மல் திருட முயன்ற ஊழியர் சஸ்பெண்ட்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!