நாமக்கலில் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் எதிரொலி... தேர்வு பணியில் இருந்த 11 கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்!!
2022-05-20@ 11:57:23

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வுகள் கடந்த இரு வாரத்துக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதத்தேர்வு நடைபெற்றது. அப்போது, கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் மாணவ, மாணவியர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே மேலும் சில மையங்களில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பரை பார்த்து தேர்வு எழுதுவது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பறிமுதல் செய்யப்பட்ட பேப்பர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேரை தேர்வு பணியில் இருந்து விடுவித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேது வர்மா உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்பதை தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!