ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி!: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!!
2022-05-20@ 10:38:09

பாட்னா: ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மீது சமீபத்தில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதிக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்ற பணிகளுக்கான தேர்வில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ரயில்வே வேலைகளை வழங்குவதற்காக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பீகார் தலைநகர் பாட்னா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளை சந்தித்த லாலு பிரசாத் ஏற்கனவே சிறை தண்டனை பெற்றவர் என்பது நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ அதிகாரி ஒருவர், லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, சில நபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் ஆரம்பகட்ட விசாரணை தற்போது எஃப்.ஐ.ஆராக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகள்
தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்
நாங்கள் நெருக்கமாக இருந்தால் டேட்டிங்கா?: நடிகருடனான உறவு குறித்து நடிகை பதில்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள ராணுவ கேப்டன் சடலம் மீட்பு: மனைவியை பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்
ஜனாதிபதியின் செயலராக ஒடிசா கேடர் அதிகாரி நியமனம்
அவர் ஒரு அப்பாவி; நிரபராதி; ஜாக்குலினின் இமேஜை கெடுக்கின்றனர்!: அமலாக்கத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு
டோலோ650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...