இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு... 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என மத்திய வங்கி தகவல்!!
2022-05-20@ 10:13:00

கொழும்பு: இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இதையும் ஏற்காத போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர்
நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசால் எந்த கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் கடந்த மாதம் 18ம் தேதி கடனாளர்களுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டாலர் பணத்திற்கான கூடுதல் ஒரு மாத அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கையில் பணவீக்கம் 30%ல் இருந்து 40%ஆக அதிகரிக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிபொருட்களை ஏற்றி வந்த கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்
நாங்கள் நெருக்கமாக இருந்தால் டேட்டிங்கா?: நடிகருடனான உறவு குறித்து நடிகை பதில்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள ராணுவ கேப்டன் சடலம் மீட்பு: மனைவியை பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்
ஜனாதிபதியின் செயலராக ஒடிசா கேடர் அதிகாரி நியமனம்
அவர் ஒரு அப்பாவி; நிரபராதி; ஜாக்குலினின் இமேஜை கெடுக்கின்றனர்!: அமலாக்கத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு
டோலோ650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...