பட்ட மேற்படிப்புக்கும் கியூட் நுழைவு தேர்வு: யுஜிசி அறிவிப்பு
2022-05-20@ 01:18:10

புதுடெல்லி: நாடு முழுவதும் மொத்தம் 45 ஒன்றிய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த ஆண்டு முதல் இந்த பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, கியூட் என்னும் நுழைவு தேர்வு அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘இந்த கல்வியாண்டு முதல் பல்கலைக் கழக பட்டமேற்படிப்புகளுக்கும் கியூட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்படும். இந்த தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று முதல் துவங்கி உள்ளன. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜூன் 18ம் தேதி. இந்த தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்படும்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
2022 ஏப்ரல் - ஜூலை ஆகிய 4 மாதங்களில் நேரடி வரி வருவாய் 40% உயர்வு: ஒன்றிய அரசு தகவல்
கபடியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கோகோ ஆட்டமும் தொழில் முறை லீக் போட்டியாக அரங்கேற்றம்...
குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியது எஸ்.பி.ஐ: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!
75ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...
மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!