சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
2022-05-19@ 20:47:15

சென்னை: சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தயார் செய்தது. சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ வழக்குகள் உட்பட 8 வழக்குகளை, சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். மாணவிகளிடம் வீடியோ கால் மூலமாக ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில், இது வரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
எனது அறக்கட்டளைக்கு அனுப்பிய பணம் எவ்வளவு? பாடலாசிரியர் சிநேகன் மீது நடிகை ஜெயலட்சுமி புகார்
50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்; போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்
சிகிச்சைக்காக 976 நாட்கள் விடுமுறை எடுத்த தலைமை காவலருக்கு மீண்டும் பணி
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!