கூடலூரில் மழையால் மண்சரிவு: அந்தரத்தில் தொங்கும் வீடுகள் : கிராம மக்கள் அச்சம்
2022-05-19@ 18:43:46

கூடலூர்: கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் தொழிலாளர்களின் வீடுகள் அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான காரணிகளால் நீலகிரி கூடலூர், பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மண் இலகு தன்மையுள்ள இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வேடன் வயல் மற்றும் தட்ட கொல்லி காலனி குடியிருப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 வருடங்களுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டாவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
மலைப் பாங்கான பகுதியில் இந்த வீடுகள் கட்டப்பட்டு இருப்பதால் மழைக் காலங்களில் வீடுகளை ஒட்டி அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. வேடன் வயல், தட்ட கொல்லி காலனியில் வசிக்கும் முத்து, வரதராஜன், ராமலிங்கம், ராம ஜெயம், சீதாலட்சுமி உள்ளிட்ட பலரின் வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவில் இருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் கவர்களால் தரைகளை மூடி வைத்துள்ளனர். எனினும் அடுத்து வரும் தொடர் மழை காலங்களில் இப்பகுதியில் மேலும் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் வரும் அரசு பேருந்து: பயணிகள் குழப்பம்
கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!