நெமிலி அருகே ஆபத்தான நிலையில் பஸ் படிக்கட்டு, ஏணியில் பயணிக்கும் மாணவர்கள்: கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
2022-05-19@ 18:41:33

நெமிலி: நெமிலி அருகே ஆபத்தான நிலையில் பஸ்சின் படிக்கட்டு, ஏணியில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு, தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் போதிய இடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பஸ்சின் படிக்கட்டிலும், பின்புறத்தில் உள்ள ஏணியில் ஏறி ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.
குறிப்பாக நெமிலி இருந்து காஞ்சிபுரம், பாணாவரம் செல்லும் பஸ்கள், அரக்கோணத்தில் இருந்து நெமிலி வழியாக வேலூர் செல்லும் பஸ், பனப்பாக்கத்தில் இருந்து திருமால்பூர் செல்லும் பஸ் ஆகியவற்றில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்களால் கூட்ட நெரிசல் அதிகரித்து படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. சில இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட வழித்தடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நன்மை கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!