காட்பாடி- சென்னைக்கு இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 7 நாட்கள் ரத்து
2022-05-19@ 15:06:24

திருப்பூர்: கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 7 நாட்களுக்கு சென்னை செல்லாது. காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுடன் திரும்பும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தினமும் காலை 6.15 மணிக்கு கோவையில் புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் உட்பட ஸ்டேஷன்களில் நின்று மதியம், 1.50 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுமார்க்கமாக மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.
இம்மாதம் நேற்று (18ம் தேதி) 24, 25 மற்றும் 31ம் தேதி, ஜூன் மாதம் 1, 7 மற்றும் 8ம் தேதி ஆகிய 7 நாட்கள் திருவாலங்காடு - அரக்கோணம் இடையே மின்வழித்தடம் மாற்றம், பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக மாலை 4.20 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு பயணிக்கும் என தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!