SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரறிவாளன் விடுதலை நீதித்துறை வரலாற்றில் முக்கியமான நாள்: அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் மா.சுப்பிரமணியன் பேச்சு

2022-05-19@ 14:45:40

துரைப்பாக்கம்: சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி திமுக சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவான்மியூர் வடக்கு மாடவீதியில் நடந்தது. பகுதி செயலாளர் துரை கபிலன் தலைமை தாங்கினார். இதில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், சிங்கை சௌந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் சென்னை துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, தலைமை சட்ட திருத்த குழு செயலாளர் பாலவாக்கம் சோமு, மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், மண்டல குழு தலைவர்கள் இரா.துரைராஜ், எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.இ.மதியழகன், கவுன்சிலர்கள் வேளச்சேரி மணிமாறன், க.தனசேகர், எம்.கிருஷ்ணமூர்த்தி, கே.கண்ணன், மு.ராசா, மாவட்ட தலைவர் எஸ்.குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர் வாசுகி பாண்டியன், வட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.விநாயகமூர்த்தி, 179வது வார்டு கவுன்சிலர் கயல்விழி ஜெயக்குமார், சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி திருவான்மியூர் டி.பாலாஜி, ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் அடையாறு சி.சுரேஷ், வேளச்சேரி கிழக்கு பகுதி வட்ட செயலாளர்கள் க.கணேஷ்குமார், ராஜாரமணன், எஸ்.ஜெயக்குமார், ஆ.பாண்டியன், பெ.ராஜி, மு.தனசேகர், வழக்கறிஞர்கள் சந்தானம், தமிழரசு, எம்.விநாயகமூர்த்தி, ஆர்.பாலசுந்தரம், சி.பரிமேலழகன், அடையாறு பாஸ்கர், அருணா, வேலாயுதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக குழந்தைகளுக்கு பால் இல்லை. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் சரி. மக்கள் வறுமையில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ‘இலங்கைக்காக உதவுவோம், நிவாரணத்தை தருவோம்’ என அறிவித்த ஒரே தலைவர் தமிழக முதல்வர்தான். சட்டமன்றத்தில் அறிவித்தபடி, ரூ.80 கோடியில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.15 கோடியில் 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகையான மருந்து பொருட்கள் என மொத்தம் ரூ.123 கோடி பொருட்கள் தமிழகத்தின் சார்பில் இலங்கைக்கு அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

பேரறிவாளனை விடுவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவ முற்பட்டபோது ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால் 31 வருடம் பேரறிவாளனை போன்றவர்கள் சிறையில் வாடும் கொடுமை ஏற்பட்டது. 31 வருட சட்ட போராட்டங்களுக்கு பின்னர் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான நாள். நீதித்துறை வரலாற்றில் கவர்னர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசின் உரிமைகளை எப்படி மதிக்க வேண்டும், மாநில அரசுடன் எப்படி ஒத்துப்போக வேண்டும், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் உறவு முறை என்ன என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்