சாமியார்மடம் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: மின்கம்ப உயரத்துக்கு பீறிட்ட தண்ணீர்
2022-05-18@ 17:47:32

சாமியார்மடம்: சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் நேற்று மதியம் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இரைச்சலோடு சுமார் 25 அடி உயரத்திற்கு நீரூற்று போல் தண்ணீர் பீறிட்டு பொங்கியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு அருகே மின்சார கம்பி செல்கிறது. தண்ணீர் மின் கம்ப உயரத்துக்கு பீய்ச்சி அடித்தது என்றாலும் மின்சார வயரில் படவில்லை. என்றாலும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று பொதுமக்கள் அஞ்சினர்.
உடனே இது பற்றி மின்வாரியம் மற்றும் காட்டாத்துறை ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தனர். ஊராட்சி தலைவர் இசையால் பொதுப்பணித்துறை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். குடிநீர் திட்டத்திற்காக தேசிய நெடுஞ்சாலையை உடைத்து ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. ஆனால் சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது. பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின்னரே மீண்டும் அந்த சாலை போடப்பட்டது. அது தரமாக போடப்படாததே இந்த உடைப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் வரும் அரசு பேருந்து: பயணிகள் குழப்பம்
கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை
பொன்னேரி அருகே வேன் மோதி இருவர் பலி: டிரைவர் கைது
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!