கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை: காதலன் தலைமறைவு
2022-05-18@ 16:01:25

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த திருநங்கையான நடிகை, காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் நடிகையின் காதலன் தலைமறைவாகி விட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷெரின் ெஷலின் மேத்யூ (24). திருநங்கை. சில மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த சில வருடமாக கொச்சி களமசேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது குடியிருப்பில் திடீரென தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
தகவலறிந்து பாலாரிவட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் ஷெரின் ெஷலின் மேத்யூ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீஸ் விசாரணையில் ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவந்துள்ளது. அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ஷெரின் ெஷலின் மேத்யூ தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியதும், காதலன் தலைமறைவாகி விட்டார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று ஷெரினின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான காரணம் என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஷெரின் ெஷலின் மேத்யூ தமிழில் பா.ரஞ்சித் இயக்கி வரும் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நான் கவலையாக இருக்கிறேன்
கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ, தனது பேஸ்புக்கில், ‘நான் மிகவும் கவலையாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். சோகமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான் அவரது மனக்கவலைக்கு காரணம் என்று ஷெரினின் நண்பர்கள் போலீசிடம் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்
பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்
போலீசை சிறைபிடித்த பாஜ பிரமுகர் மீது வழக்கு
இன்று பிரிவு உபசார விழா துணை ஜனாதிபதியுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு
40 கிலோ வெடிபொருளை சுமக்கும் எல்லை பாதுகாப்பில் நவீன டிரோன்கள் எச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!