சென்னையில் பெண்ணிடம் ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: மூதாட்டியை வெட்டி படுகொலை செய்த இளைஞர் கைது
2022-05-18@ 15:42:15

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில், போதையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட மூதாட்டியை, சரமாரியாக வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், வயதான பாட்டியின் காதை அறுத்து நகை திருடியது, தந்தையையே கொலை செய்தது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புச் சட்டம் காவலில் சிறையில் இருந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்புதான், விக்னேஷ் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.
இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்பவரின் மகள் ஆர்த்தியிடம், தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஆர்த்தியிடம் விக்னேஷ் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கிருந்த வேலாத்தா என்ற மூதாட்டி தட்டிகேட்டுள்ளார். அப்பொழுது, போதை தலைக்கேறிய நிலையில், கையில் பட்டா கத்தியுடன் நின்றிருந்த விக்னேஷ், வேலாத்தாவை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இதனால் இளைஞர் விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது
லாட்ஜுக்கு வரவழைத்து மாணவியை பலாத்காரம் செய்த பிரபல டிக் டாக் நடிகர் கைது: செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள் சிக்கின
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது
‘செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள்’ லாட்ஜுக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்: பிரபல டிக் டாக் நடிகர் கைது
வாக்கிங் சென்றபோது நீதிபதியை கொன்ற 2 குற்றவாளிகளுக்கு: சாகும் வரை சிறை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!