நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
2022-05-18@ 11:02:54

சென்னை: நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், 'Wunderbar films' என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி பாடல், எழுத்து, இயக்கம் என பன்முக திறமை கொண்ட இவர், Wunderbar films என்ற பெயரில் நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த Wunderbar films நிறுவனத்தின் யூடியூப் சேனல் நேற்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அந்த சேனலில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து 'யூடியூப் இந்தியா', Wunderbar films சேனலை மீட்டெடுக்க உதவி செய்து வருவதாகவும் விரைவில் சேனல் மீண்டு வரும் என்றும் நேற்று கூறப்பட்டது.
இந்நிலையில், Wunderbar films யூடியூப் சேனல் நேற்று காலை ஹேக் செய்யப்பட்ட நிலையில், இன்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை
லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!