5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
2022-05-18@ 00:06:07

புதுடெல்லி: உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான, உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், கன்வீல்கர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், அசாம், தெலங்கானா மாநிலங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள விபின் சங்கி, உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அம்ஜத் சயீத் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கும்படியும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மின் எம் சாயா கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயன், இதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும்படியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது தெலங்கானா தலைமை நீதிபதியாக உள்ள சதீஷ் சந்திர சர்மா, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்யப்படுகிறார்.
Tags:
5 High Court new Chief Justices Supreme Court Collegium 5 உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதிகள் உச்ச நீதிமன்ற கொலிஜியம்மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...