விசிக முகாம் கூட்டம்
2022-05-18@ 00:05:20

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் விசிக முகாம் கூட்டம், கிராம முகாம் செயலாளர்கள் தமிழ்பாண்டியன், அருண் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் ஜெ.சுரேஷ் வரவேற்றார். முகாமில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்தன், மாநில இளஞ்சிறுத்தைகள் துணை செயலாளர் சுந்தர், மாநில துணை பொருளாளர் கைவண்டூர் செந்தில், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பன்னீர் ஆகியோர் பங்கேற்று சனாதன சக்திகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தடுத்து அம்பேத்கர் வழியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ உறுதிப்படுத்த இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பப்லு, கேசவன், நகர செயலாளர் ராஜதுரை நிர்வாகிகள் சூரியன், விக்னேஷ், கோபி, அண்ணாதுரை உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி மம்தாவுடன் திடீர் சந்திப்பு
எனக்கு பொறுப்பு கொடுப்பதில்லை; நான் அமைதியாக இருக்க வேண்டுமாம்!: தெலங்கானா பாஜக மீது நடிகை அதிருப்தி
ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு
இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை இழந்தார் எடப்பாடி: லெட்டர்பேடில் இருந்தும் நீக்கினார்
அனைத்து கசப்புகளையும் மனதில் வைக்க வேண்டாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு: சென்னை வீட்டில் பரபரப்பு பேட்டி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...