எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.! அதிபர் கோத்தபய பதவி தப்பியது: இலங்கையில் பரபரப்பு
2022-05-18@ 00:02:02

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் கடந்த 9ம் தேதி மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், நாட்டை ஆட்டி படைக்கும் உச்சப்பட்ச அதிகாரத்தை கையில் வைத்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றம் கூடிய போது, அதிபர் கோத்தபய மீது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா, முக்கிய தமிழர் கட்சியான டிஎன்ஏ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) ஆகியவை தனித்தனியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. இவற்றின் மீது மே 17ம் தேதி விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பின், முதன் முறையாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதுமே அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. அதில், தீர்மானத்தை ஆதரித்து 68 எம்பி.க்களும், எதிர்த்து 119 எம்பி.க்களும் வாக்கு அளித்தனர். இதன் மூலம், கோத்தபயவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அவருடைய பதவிக்கு வந்த ஆபத்து நீங்கியது.
மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தஞ்சம்..!
சீனாவில் புதிய வைரஸ் லங்யா: 35 பேர் பாதிப்பு
இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் வலையில் சிக்கியது நேபாளம்: ரூ.1,500 கோடி கடன் உதவி
22ஏ சட்டத் திருத்தத்தில் மாற்றம் பிரதமர், அமைச்சர்களை அதிபரால் நீக்க முடியாது: இலங்கை அமைச்சர் தகவல்
சீன தூதரை அழைத்து இங்கிலாந்து கண்டிப்பு
நீல வில்லை விருது நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு சிறப்பு கவுரவம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!