தமிழக அரசின் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கப்பல் இன்று புறப்பாடு? அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு
2022-05-18@ 00:01:46

சென்னை: இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரச் சிக்கலில் தவித்து வருகிறது. இதனையடுத்து தமிழக பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக, ரூ.80 கோடியில் 40,000 டன் அரிசியும், ரூ.28 கோடி மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்களும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடரும் வழங்கத் தமிழக அரசு முனைப்புடன் இருப்பதாக பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினர். இதில் முதல்வர் மற்றும் எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை ஒன்றிய மற்றும் மாநில அரசின் முத்திரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன் என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்சல் செய்யும் தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது கப்பலில் நிவாரண பொருட்கள் ஏற்றப்படுகிறது.இந்நிலையில், இந்த பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று கப்பலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். முதல்கட்டமாக செல்லும் இந்த கப்பலில் ரூ.123 ேகாடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றப்பட்டு வருகிறது. இன்று மாலை 5 மணி அல்லது அடுத்த நாள் இலங்கைக்கு நிவாரண பொருட்களுடன் கப்பல் புறப்பட்டு செல்கிறது.
மேலும் செய்திகள்
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11 லட்சம் அபராதம்: போக்குவரத்து துறை நடவடிக்கை
மின்சார துறையில் முதற்கட்ட பணிகளை ரூ.2038 கோடியில் முடிக்க திட்டம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
அரியவகை நோயால் அவதிப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவி: கலெக்டர் அறிவிப்பு
வியாபாரிகளுக்கு பிரச்னைகள் தொடர்கிறது: ஏ.எம்.விக்கிரமராஜா குற்றச்சாட்டு
இளைஞர்களின் வாழ்க்கையை சீரமைக்க தாம்பரம் காவல் துறையினர் சார்பில் போதை தடுப்பு மறுவாழ்வு திட்டம்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு
சோனியாவுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!