SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

500 ஆண்டுகள் பழமையான ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்: வியாபாரிகள் போல நடித்த சிலை கும்பல் சுற்றிவளைப்பு

2022-05-18@ 00:01:45

சென்னை,மே 18: 500 ஆண்டுகள் பழமையான ரூ.25 கோடி மதிப்புள்ள 9.8 கிலோ எடை கொண்ட பச்சைக்கல் லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி அருகே பழமையான நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் ஒன்று விற்பனை செய்ய ஒரு கும்பல் பதுக்கி வைத்துள்ளது என்ற தகவல் சிலை கடத்தல் திருட்டு தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடத்தல் கும்பலை பிடிக்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜாராம் தலைமையில் டிஎஸ்பி கதிரவன், உதவி ஆய்வாளர் ராஜசேகரன், செல்வராஜ், காவலர்கள் பிரபாகரன், பாண்டியராஜ், சுந்தர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், வியாபாரிகள் போல நடித்து, சிலையை விற்பனை செய்ய முயன்ற கடத்தல் கும்பலை தொடர்பு கொண்டு விலை பேசி உள்ளனர்.

சுமார் 40 கோடியில் ஆரம்பித்த பிசினஸ் இறுதியாக 25 கோடிக்கு முடிந்தது. அதன் பிறகுதான், பச்சைக்கல் லிங்கம் சிலைக்கான புகைப்படங்களை வியாபாரிகள் வேடத்தில் இருந்த போலீசாரிடம் காண்பித்துள்ளனர். இதன் பிறகு நாங்கள் நேரடியாக சிலையை பார்த்த பிறகே பணம் ெகாடுப்போம் என்று  வியாபாரிகள் வேடத்தில் இருந்த போலீசார் கெடுபிடி காண்பித்தனர். ஒரே நாளில் ரூ.25 கோடி கிடைக்கும் என்பதால் சிலையை பதுக்கி வைத்த கும்பல் போலீசார் விரித்த ஆசை வலையில் சிக்கியது. அதன்படி சிலை கடத்தல் நபர்கள், பூந்தமல்லி அருகே நேற்று முன்தினம் சிலையை கொண்டு வருவதாக உறுதியளித்தனர். அதன்படி சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் சிலையை பூந்தமல்லி அருகே கொண்டு வந்தனர்.

அப்போது சிலையை வாங்கும் வியாபாரிகள் போல் இருந்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வலைத்து 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து பச்சைக்கல் லிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பிடிபட்ட 2 நபர்களை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சென்னை வெள்ளவேடு புதுகாலணியை ேசர்ந்த பக்தவச்சலம்(ஏ)பாலா(46), சென்னை புதுச்சத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ்(42) என தெரியவந்தது. இருவரும் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட 2 நபர்களின் பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலை குறித்து தொல்லியல் துறை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்த போது, பச்சைக்கல் லிங்கத்தினை உலோகத்தால் ஆகிய நாகாபரணம் தாங்கி இருப்பது போன்றும், சிலையின் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வாருடன் உள்ளது.

சிலை சுமார் 29 செ.மீட்டர் உயரமும் 18 செ.மீட்டர் அகலம் கொண்டுள்ளது. சிலை பீடத்தின் அடிபாக சுற்றளவு 28 செ.மீட்டர் உள்ளது. சிலையின் எடையானது 9 கிலோ 800 கிராம் எடை கொண்டுள்ளது. சிலையில் அமைக்கப்பட்டுள்ள பச்சைக்கல் லிங்கம் 7 செ.மீட்டர் உயரமும், அதன் சுற்றளவு 18 செ.மீட்டராக உள்ளது. சிலை குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்து பார்த்தபோது, லிங்கத்தின் கீழே சிவபெருமானின் 5 முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால்  500 ஆண்டுகள் தொன்மையானது என தற்போது நடத்திய தொல்லியத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சிலையில் நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சிலை திருட்டு பின்னணியில் சர்வதேச கும்பல் இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே கைது ெசய்யப்பட்ட 2 பேரிடம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்