சீனர்களுக்கு முறைகேடான வகையில் விசா பெற்று தந்த விவகாரம்: டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு
2022-05-17@ 15:29:46

டெல்லி: டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றது. 269 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்க ரூ.50 லட்சம் பெற்றதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் சுமார் 7 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றது.
ஆனால் சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நீடிக்கிறது. இந்நிலையில் சோதனை தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்; முறைகேடாக விசா வழங்கியது தொடர்பாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 6 நகரங்களில் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் மான்சாவில் உள்ள அனல்மின் நிலையத்தில் பணியாற்ற சீன நாட்டினரை அழைத்து வந்த போது விசா வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. உள்துறை அமைச்சகம் அனுமதித்த அளவை விட அதிகமான சீன நாட்டினருக்கு அனல் மின் நிலையத்தில் பணியாற்ற விசா வழங்கப்பட்டுள்ளது. வேறு காரணங்களைக் கூறி சீன நாட்டினருக்கு விசா பெறப்பட்டது.
ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டவர் மட்டுமே பணியார வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. முறைகேடாக விசா பெறுவதற்கு சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியுள்ளார். சீன நாட்டினர் 263 பேருக்கு பணி விசா வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விசாக்களும் ஒரே மாதத்திற்குள் வழங்கப்பட்டுள்ளன. சீன நாட்டினருக்கு முறைகேடாக விசா வழங்கியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்
விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளியும், தமிழ்நாட்டுக்கு கிள்ளியும் கொடுத்த ஒன்றிய அரசு
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ் திட்டமா?.. விரிசல் அதிகரித்திருப்பதால் எந்நேரமும் கூட்டணி உடைய வாய்ப்பு
விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்
பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!