SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் தாழிகள்: ஆய்வாளர்கள் ஆச்சரியம்

2022-05-17@ 12:10:17

திருப்புவனம்: கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில், கொந்தகை தளத்தில் அடுத்தடுத்து முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருவது ஆய்வாளர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. பிப். 13ம் தேதி அகரம், மார்ச் 30ம் தேதி கொந்தகையில்  அகழாய்வு பணிகள் தொடங்கின. மாநில தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கீழடி அகழாய்வு தள இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா, சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொந்தகையில் இதுவரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் எட்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ள தாழிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளன. தாழிகளில் உள்ளே காணப்படும் உணவு குவளை, சுடுமண் பாத்திரங்கள் உள்ளிட்டவை வெளியே கிடக்கின்றன. 8ம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ள தாழிகள் பெரும்பாலும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் கிடைத்துள்ளன. கொந்தகை தளத்தில் ஏழாம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு 30 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

7ம் கட்ட அகழாய்வில் கிடைத்த தாழிகள் முழுமையாகவும், சேதமடையாமலும் இருந்தன. தாழிகளினுள் உள்ள சுடுமண் பாத்திரங்களும் உருக்குலையாமல் கிடைத்தன. 7ம் கட்ட அகழாய்வில் தாழிகள் இடையே பெரும் இடைவெளி இருந்தன. 5 முதல் 15 அடி இடைவெளி இருந்தது. ஆனால், 8ம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற இடைவெளி இல்லை.  அருகருகே கிடைக்கும் தாழிகள் அனைத்தும் சேதமடைந்து இருப்பதால் இரண்டு கட்ட அகழாய்விலும் கிடைத்த தாழிகளுக்குள் கால இடைவெளி அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

எனவே தாழிகளை ஆய்வு செய்யும் முன் இடைவெளியின்றி அருகருகே தாழிகள் புதைப்பதற்கான காரணம் ஆய்வு செய்யப்பட உள்ளது. 8ம் கட்ட அகழாய்வில் தாழிகளின் இடையே உள்ள இடைவெளி அளவிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் பின்னரே தாழிகளினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி துவங்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்