இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்
2022-05-17@ 10:42:33

ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த லாவிட் ஷெரீப் என்ற 21 வயதான பாலஸ்தீன இளைஞர் நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்த ஷெரீப்பின் உடல் அல் அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் அடக்கம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனர்கள் சிலர் கற்கள் வீசினர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் வீசப்பட்டது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 100பேர் காயமடைந்தனர். இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மோதலை அடுத்து ஜெருசலேமில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் கோத்தபய விரட்டியடிப்பு: எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் ஓட்டம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!