25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
2022-05-17@ 01:45:38

திருத்தணி: தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் புதன்கிழமை தாலுகா அளவில் மருத்துவ ஆய்வு முகாம்கள் நடந்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய தாலுகாவை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் விழா திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து, மூன்று சக்கர சைக்கிள்களை பெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்த எம்எல்ஏ சந்திரனுக்கு நன்றி தெரிவித்தனர். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, முடநீக்கி வல்லுநர் ஆஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
25 Alternative Skilled Three Wheelers S. Chandran MLA 25 மாற்று திறனாளி மூன்று சக்கர சைக்கிள்கள் எஸ்.சந்திரன் எம்எல்ஏமேலும் செய்திகள்
தொடர்ந்து 12 மணிநேரம் 1330 திருக்குறளுக்கேற்ப பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்எல்சி ஊழியர் ரூ.27 லட்சம் மோசடிரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்எல்சி ஊழியர் ரூ.27 லட்சம் மோசடி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி
மின் சட்ட திருத்த மசோதா தாக்கலை கண்டித்து திருச்சியில் நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்: முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு
தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!