லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
2022-05-17@ 01:25:37

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். திருவள்ளூர், மேல்நல்லாத்தூரில் நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை கண்ட லாரி டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இறந்த நபர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து மேல்நல்லாத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!