தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது: சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்
2022-05-17@ 01:04:08

சென்னை: தசாவதாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியாது என்று இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார். கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள கூகுள் குட்டப்பா என்ற படம் சமீபத்தில் வெளிவந்தது. இது தொடர்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தசாவதாரம் படத்தின் 2ம் பாகம் வெளிவருமா என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்டதற்கு பதில் அளித்து கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: கமல்ஹாசன் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். தசாவதாரம் படத்துக்கும் மிக கடுமையாக உழைத்தார். தசாவதாரம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுகுறித்து கமல் 2 மணி நேரம் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை எங்களால் உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம் 2ம் பாகத்திற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு ரவிகுமார் கூறினார்.
Tags:
Dasavathaaram Part 2 can not be created at all KS Ravikumar தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது கே.எஸ்.ரவிகுமார்மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!