தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலி: அதிர்ச்சியில் மனைவியும் சாவு
2022-05-17@ 00:57:37

மேச்சேரி: தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலியானார். இந்த துக்கத்தில் அவரது மனைவியும் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பண்ணன்(95). இவரது மனைவி குஞ்சம்மாள் (92). நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின்போது பாப்பண்ணனின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் முதிய தம்பதியால் தண்ணீரை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் இருவரும் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கினர். இரவு 11 மணியளவில் பாப்பண்ணன் கட்டிலில் இருந்து இறங்கியுள்ளார்.
அப்போது மழைநீரில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து குஞ்சம்மாள் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது பாப்பண்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குஞ்சம்மாள் சோகத்தில் மூழ்கினார். இதனிடையே சோகத்தில் இருந்த குஞ்சம்மாள், நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். பரிசோதித்ததில் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து தாரமங்கலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதிய தம்பதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Tharamangalam entered the house failed in the rain killed the old man தாரமங்கலம் வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி முதியவர் பலிமேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!