ஜூலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்
2022-05-17@ 00:43:21

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணிகளின் நேரடி நியமனத்துக்காக நடந்த போட்டித் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதுகுறித்து ஆட்சேபனைகளை ஏப்ரல் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 29 ஆயிரத்து 141 பேர் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறை தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடப்பதால் பகுதியாக, பாடவாரியாக மட்டுமே பாட வல்லுநர்கள் அழைக்கப்பட்டு விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்து வருகிறோம். இந்த பணி முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். இந்தப் பணி முடிந்ததும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதன்பின் விடைத்தாள்கள் கணினி வழி திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்த பட்சம் 45 நாட்கள் தேவைப்படும். அதற்கு பிறகு சான்று சரிபார்ப்புக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இதனால் மேற்கண்ட பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை இறுதியில் வெளியிடப்படும்.
Tags:
July Masters Graduate Teacher Selection Results ஜூலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!