கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்
2022-05-17@ 00:36:19

கோவில்பட்டி: அகில இந்திய அளவிலான 12வது தேசிய இளையோர் ஆடவர் ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் இன்று தொடங்குகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 30 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ, பி பிரிவில் தலா 3 அணிகளும், சி, டி, இ, எப், ஜி, எச் பிரிவுகளில் தலா 4 அணிகளும் உள்ளன. தமிழ்நாடு ஜி பிரிவிலும், புதுச்சேரி சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இன்று காலை தொடங்கும் முதல் ஆட்டத்தில் பீகார் - அசாம் அணிகள் மோதுகின்றன. மாலையில் நடைபெறும் தொடக்கவிழாவுக்குப் பிறகு நடக்கும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு-சட்டீஸ்கர் அணிகள் களம் காண்கின்றன. லீக் சுற்று மே 24ம் தேதியுடன் முடிகிறது. காலிறுதி ஆட்டங்கள் மே 25ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் மே 26ம் தேதியும், இறுதி ஆட்டம் மே 29ம் தேதியும் நடைபெற உள்ளன.
மேலும் செய்திகள்
பாரா டிடியில் 2 பதக்கம்
மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி அசத்தல்
மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி
காமன்வெல்த் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம்: நீத்து, பாங்கல், நிக்கத் அசத்தல்
மகளிர் பேட்மின்டன்; பைனலில் சிந்து.! லக்ஷியாவும் முன்னேற்றம்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக ஆனந்த் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!