வேலைநிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் ஆதரவு ஒன்றிய அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம்: மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
2022-05-17@ 00:14:57

சென்னை; ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் தனது முழு ஆதரவையும் அளிப்பதாக கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் வெளியிட்ட அறிக்கை; தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த தொழில்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த நெருக்கடிக்கு மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம். இந்திய பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கட்டுப்படியான விலையில் பருத்தியை கொள்முதல் செய்து, அதனை தொழில் துறையினருக்கு சரியான விலையில் வழங்கிட வேண்டும்.
ஆனால், 2021 ம் ஆண்டில், இந்திய பருத்தி கழகத்தின் வழியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று பாஜ ஒன்றிய அரசு தடுத்துவிட்டது. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். ஜவுளித் தொழிலை பாதுகாக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
Tags:
Strike Marxist support Union government misguided policy Secretary of State K. Balakrishnan accused வேலைநிறுத்த மார்க்சிஸ்ட் ஆதரவு ஒன்றிய அரசாங்க தவறான கொள்கை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
'நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா?'... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
சொல்லிட்டாங்க...
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
காங்கிரசில் நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய் பாஜ.வுக்கு தாவல்
சொல்லிட்டாங்க...
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!