இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
2022-05-17@ 00:14:25

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸுடன் (23 வயது, 5வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (34 வயது, செர்பியா), அதிரடியாக விளையாடி முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். ஆனால், 2வது செட்டில் சிட்சிபாஸ் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை நீண்டது. அதில் ஜோகோவிச் 7-6 (7-5) என வென்று 6வது முறையாக இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டில் ஜோகோவிச் பெறும் முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் 38வது பட்டத்தை வென்றுள்ள அவர், இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஸ்பெயின் நட்சத்திரம் நடால் 36 பட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
Tags:
Italy International Tennis 6th time Djokovic Champion இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறை ஜோகோவிச் சாம்பியன்மேலும் செய்திகள்
சில்லி பாய்ன்ட்...
ஃபிபா அதிரடி நடவடிக்கை இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்
சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்
22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!