ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
2022-05-16@ 17:30:29

கிருஷ்ணகிரி: ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 50 டன் வெங்காயம் மழையால் அழுகி சேதமடைந்துள்ளது. அதிகாரிகள் பாதிப்பை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்,சோளக்கரை, சாரல்தொட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட வெங்காயம், சென்னை, பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெங்காய ஆர்டர்கள் வரவில்லை.
இதனால் சுமார் 70 டன் வெங்காயத்தை விவசாயிகள் பாதுகாப்பான இடத்தில வைத்திருந்தனர். இந்தநிலையில், ஓசூர், சோளக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால், இருப்பில் வைக்கப்பட்ட 70 டன் வெங்காயம் நீரில் நனைந்தது. இதனால் சுமார் 50 டன் அளவிலான வெங்காயம் அழுகி சேதமானது. விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.13.66 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
கொடைக்கானலில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட புதுவிதமான அறை: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி விவசாயிகள் போராட்டம்: பருத்திக்கு உரிய விலை கேட்டு சாலை மறியல்..!
வெளிவரும் பண்டைய தமிழர்களின் பயன்பாடு!: கீழடியில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு..!!
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!