மதுரையில் தனியார் நிறுவன காவலாளி படுகொலை: போலீசார் தீவிர விசாரணை
2022-05-16@ 16:36:08

மதுரை: மதுரையில் தனியார் நிறுவன காவலாளி கொல்லப்பட்ட நிலையில் , தொடர்கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற 63 வயது முதியவர். மதுரை மேலைக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேருந்து நிறுத்தும் இடத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை அந்நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது முருகேசன் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடனும், அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்து நிறுவனத்தில் உள்ள விலையுயர்ந்த பேட்டரிகளை திருட வந்த நபர்களை தடுத்ததால் காவலாளி முருகேசன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட புதுவிதமான அறை: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி விவசாயிகள் போராட்டம்: பருத்திக்கு உரிய விலை கேட்டு சாலை மறியல்..!
வெளிவரும் பண்டைய தமிழர்களின் பயன்பாடு!: கீழடியில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு..!!
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி
பண்ருட்டியில் கொரோனாவால் தாய் உயிரிழப்பு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஊர்மக்கள்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!