கடலாடி பகுதியில் காலங்களைக் கடந்து நிற்கிறது... 500 வருடம் பழமையான அத்தி சமூக நல்லிணக்கத்திற்குச் சாட்சி
2022-05-16@ 12:51:25

சாயல்குடி : இந்து - முஸ்லீம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் சமுதாய நல்லிணக்க அத்தி மரம், கடலாடி பகுதியில் கடும் கோடையிலும் பசுமையாக காட்சியளிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில மன்னர் வாழ்ந்து வந்தார். இவர் மறைவிற்கு பிறகு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அத்தி மரம் ஒன்று இந்துக்களால் நடப்பட்டு வளர்க்கப்பட்டது. அவர் மறைந்து சுமார் 500 ஆண்டுகள் ஆன நிலையிலும், அந்த மரம் தற்போது வரை பசுமையாக உள்ளது. மழையின்றி தொடர் வறட்சி ஏற்பட்டாலும், புயல், கடும்மழை போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், சேதமடையாமல் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்த மரம் சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக விளங்கி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலக்கடலாடி முதியவர்கள் சிலர் கூறும்போது, ‘‘கடலாடி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அதிகமாக வாழ்ந்து வருகிறோம். விவசாயம் மட்டுமே பிரதான தொழில். இப்பகுதியினருக்கு முஸ்லீம் இனத்தை சேர்ந்த குறுநில மன்னரான ரணசிங்க பட்டாணி சாயூபு, விவசாய நிலங்கள் வழங்கி கண்மாய், வரத்துக் கால்வாய், குளங்களை அமைத்து தானமாக வழங்கியதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அவர் மறைவிற்கு பிறகு அவர் நினைவாக இப்பகுதி இந்துகள் சேர்ந்து இந்த அத்தி மரத்தை நட்டு, பராமரித்து வளர்த்தனர்.
இயற்கை சீற்றங்கள், கடும் வறட்சி ஏற்பட்டாலும் கூட சேதமின்றி இன்று வரை இந்த மரம் பசுமையாக உள்ளது. அவர் நினைவாக மொகரம் பண்டிகையின் போது பூக்குழி திருவிழா ஒரு வாரம் நடத்தி இந்து - முஸ்லீம் ஒற்றுமையாக சமூக நல்லிணக்க திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். அத்தி மரத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை எடுத்து வந்து கடலாடி மங்கள விநாயகர்கோயில் அருகே உள்ள பூக்குழி திடலில் வழிபாடு செய்து பூக்குழி இறங்குவோம்.
பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி வழிபாடு செய்வர். இதனால் விவசாயம் செழித்து, பொதுமக்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. ஐந்து தலைமுறைக்கு முன்பே சாதி, மதம் பேதமின்றி சமூக ஒற்றுமையாக இருந்துள்ளனர் என்பதற்கு இந்த மரமே சாட்சி’’ என்கின்றனர்.
பெயருடன் ரணசிங்கம்...
ரணசிங்க பட்டாணி சாயூபு மறைவிற்கு பிறகு மேலக்கடலாடியில் திருமணமாகும் தம்பதியினருக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளது. அதுபோன்று தொடர் வறட்சி ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமத்தினர் கவலை அடைந்துள்ளனர். கிராமத்தில் ஒருவருக்கு கனவில் தோன்றி பூக்குழி திருவிழா நடத்த பட்டாணி உத்தரவிட்டாராம். அந்தாண்டு முதல் தற்போது வரை பிறக்கும் ஆண் குழந்தையின் பெயருக்கு முன்பு ரணசிங்க என்றும் முடிவில் தலைவர் என்றும் பெயர் வைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளதாக இப்பகுதி மக்கள் ெதரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!