SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூப்பர் கிங்சை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

2022-05-16@ 01:45:40

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்று பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. கான்வே 5 ரன், மொயீன் அலி 21 ரன் (17 பந்து, 2 சிக்சர்), ருதுராஜ் கெயிக்வாட் 53 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம் துபே (0), கேப்டன் தோனி 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

நாராயண் ஜெகதீசன் 39 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), மிட்செல் சான்ட்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ஷமி 2, ரஷித், ஜோசப், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய குஜராத் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்றது. கில் 18 ரன், மேத்யூ வேட் 20 ரன், கேப்டன் ஹர்திக் பாண்டியா 7 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். விரித்திமான் சாஹா 67 ரன் (57 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் மதீஷா பதிரணா 2, மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தினர். குஜராத் 13 போட்டியில் 10வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. சாஹா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்