கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு மே 22ல் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
2022-05-16@ 01:32:36

சென்னை: கோயில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் சென்னை மண்டல மாநாடு மே 22ல் நடக்கிறது. இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார் என்று அச்சங்கத்தின் தலைவர் வாசு கூறினார். இது குறித்து கோயில் பூசாரிகள் நல சங்க தலைவர் வாசு கூறியதாவது: தமிழக அரசு பதவியேற்ற பிறகு அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இறைவனுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் படிப்படியாக மீட்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த அரசு ஆன்மீக அரசாகவும், பூசாரிகளுக்கு நன்மை பயக்கும் அரசாக உள்ளது. நிதி நெருக்கடி இருந்த போதிலும் பூசாரிகள் கேட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
அன்னை தமிழில் அர்ச்சனைகள், 10 கோயில்களில் பிரசாத விநியோகம், ஏராளமான கோயில்களில் திருப்பணி என எண்ணற்ற செயல் திட்டங்களை அரசு நிதி மூலம் மனமுவந்து நிறைவேற்றி வருகிறது. இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் மே 22ம் தேதி கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு நடைபெற உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல மாநாடு முடிந்த பின்பு கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Temple Priests Welfare Association Chennai Regional Conference May 22 Minister Sekarbabu கோயில் பூசாரிகள் நல சங்க சென்னை மண்டல மாநாடு மே 22ல் அமைச்சர் சேகர்பாபுமேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!