கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து 501 கன அடியாக அதிகரிப்பு பூண்டி ஏரியில் வேகமாக உயரும் நீர்மட்டம்
2022-05-16@ 00:35:35

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு 501 கனஅடியாக அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், அக்னி வெயில் காரணமாக இந்த ஏரிகளில் நீர்மட்டம் மெல்ல குறைய தொடங்கியது. இந்த ஏரிகளிலும் தற்போது 10 டிஎம்சி நீர்இருப்பு இருந்தது. கோடை வெப்பம் மற்றும் நுகர்வு காரணமாக அதுவே மாத இறுதியில் 7 டிஎம்சி என்ற அளவில் குறைந்தது. இதனிடையே, கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், ஏரிகளில் நீர் இருப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
மேலும், கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இரண்டாம் தவணைக்கான தண்ணீர் கடந்த 5ம்தேதி முதல் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 293 கன அடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று முன்தின நிலவரப்படி இதன் அளவு 501 கனஅடியாக அதிகரித்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து 1,666 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் தமிழகத்துக்கு 501 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 1,268 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதன் அளவு இன்னும் சில நாட்களில் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 653 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Krishna Canal drainage cubic feet rise Boondi Lake water level கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து கன அடி அதிகரிப்பு பூண்டி ஏரி நீர்மட்டம்மேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!