அதிமுக ஆட்சியில் போலி தணிக்கை சான்று கொடுத்து 117 நிறுவனங்கள் முறைகேடு: மாசு கட்டுப்பாட்டு வாரிய விசாரணையில் அம்பலம்
2022-05-15@ 00:16:16

சென்னை: தமிழக மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுவனங்கள் சமர்ப்பித்த இந்த தணிக்கை அறிக்கையில் பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் தங்களது மொத்த நிலையான சொத்து மதிப்பை குறைத்து காண்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், 117 நிறுவனங்கள் போலியான தணிக்கை சான்றுகளை கொடுத்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு விதிகளில் முறைகேடு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சான்றுகளில் பெரும்பாலானவை ஒரே மாதிரியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதில், ஒரு நிறுவனத்தில் கடந்த 2016ல் ₹58 லட்சம் இருந்த சொத்தின் மதிப்பில், ₹24 லட்சமாக குறைத்து குறிப்பிட்டுள்ளனர். இந்த சொத்தின் மதிப்பை வைத்து தான் லைசென்ஸ் கட்டணம் இறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக, ₹5 கோடிக்கு கீழ் சொத்து மதிப்புள்ள நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ₹38,750 செலுத்த வேண்டும். அதே போன்று ₹5 கோடி முதல் ₹10 கோடி வரை மதிப்பு உள்ள நடுத்தர நிறுவனங்கள், ₹10 கோடி மதிப்புக்கு மேல் உள்ள நிறுவனங்கள், தங்களது மதிப்பிற்கு ஏற்ப உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.ஆனால், 117 நிறுவனங்கள் சொத்தின் மதிப்பை குறைத்து தவறான தணிக்கை சான்றை சமர்பித்துள்ளனர். இவர்களின் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால், நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு 3 மாதம் அல்லது ₹10 ஆயிரம் அபராதம், இல்லையெனில் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!