அறநிலையத்துறையில் 23 உதவி ஆணையர்கள் டிரான்ஸ்பர்: தமிழக அரசு உத்தரவு
2022-05-15@ 00:16:07

சென்னை: அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் உதவி ஆணையர் விஜயராணி விழுப்புரம் கோட்ட உதவி ஆணையராகவும், தியாகராஜசுவாமி கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி திருவள்ளூர் உதவி ஆணையராகவும், பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் உதவி ஆணையராகவும், ஆணைமலை மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி கோவை உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதேபோல், ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் லட்சுமி பாஸ்கரன் சென்னை உதவி ஆணையர் -3 ஆகவும், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் அலுவலக மேலாளர் பாஸ்கரன் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையரின் நேர்முக உதவியாகளராகவும், ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜா ஆணையர் அலுவலக சட்ட சேர்மம் உதவி ஆணையராகவும், தஞ்சாவூர் இணை ஆணையர் அலுவலக மேலாளர் ரவிச்சந்திரன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரர் கோயில் உதவி ஆணையராகவும், நெல்லையப்பர் கோயில் கண்காணிப்பாளர் திருநெல்வேலி உதவி ஆணையராகவும், ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் சுவாமி நாதன் பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையராகவும், திருப்பூர் இணை ஆணையர் அலுவலக மேலாளர் லட்சுமி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நேர்முக உதவியாளராகவும், கன்னியாகுமரி மாவட்ட கோயில்கள் கண்காணிப்பாளர் தங்கம் நாகர்கோயில் உதவி ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...