ஜூன் மாதத்தில் பொதுக்குழு கூட்ட அதிமுக தலைமை முடிவு
2022-05-14@ 14:39:21

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் மாநிலங்களவை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அதிமுக பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போவதாக வெளியான தகவல் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்வி தொடர்பாக ஆலோசிக்க பொதுக்குழு கூட்டம் வேண்டும் என கட்சியினர் கோரிக்கைவிடுத்து வந்தனர்.
ஆனால் சசிகலா விவகாரம், பன்னீர்செல்வம், பழனிச்சாமி இடையேயான மோதல் ஆகிய காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்தது. இந்த ஆண்டிற்கான கூட்டம் இதுவரை கூட்டப்படாத நிலையில் சட்டப்பேரவை கூட்டம் முடிந்தவுடன் மே மாத இறுதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் 10-தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் திமுகவிற்கு 4 எம்.பி.க்களும், அதிமுக 2 எம்.பி.க்களும் கிடைக்க வாய்ப்புள்ள.
அந்த இரண்டு எம்.பி. பதவியை பிடிக்க அதிமுகவில் இப்போதே மோதல் சூடுபிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் எம்.பி. பதவி கேட்டு தலைமையை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பொதுக்குழுவை கூட்டினால் உட்கட்சி மோதல் பெரிதும் அதிகரிக்கும் என்பதால் மாநிலங்களவை தேர்தல் முடிந்த பின்னர் ஜூன் 3 அல்லது 4-வது வாரத்தில் நடத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
அப்போது 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு ஒப்பந்தம் அளிப்பது, செயல்படாத மாவட்ட செயலாளர்கள் நீக்குவது உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. மேலும் சசிகலாவை நீக்கியது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...