வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
2022-05-14@ 12:44:46

தேனி : தேனி அருகே வீரபாண்டியில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மே 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கவுமாரியம்மன் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கவுமாரியம்மன் உற்சவ சிலைக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் அம்மன் அமர்த்தப்பட்டது. முன்னதாக யாழி பூஜை, யாகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, பரம்பரை முறைதாரர்களான போடி ஜமீன்தார் வடமலை முத்து சீலைராஜபாண்டியன் வம்சாவளியினர் மற்றும் பரம்பரை முறைதாரர்களான வீரபாண்டி நாட்டாண்மை மணி, கணக்குபிள்ளை ரத்தினசபாபதி, பெரியவீடு மாரிசாமி பிள்ளை, வயல்பட்டி தலைவர் குபேந்திரபாண்டியன், சத்திரப்பட்டி ஜெகதீஸ் ஆகியோர் முறை செய்த பிறகு நடந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன், திண்டுக்கல் போலீஸ் டிஐஜி ரூபேஸ்குமார் மீனா, எஸ்பி பிரவீன்உமேஸ்டோங்கரே, டிஆர்ஓ சுப்பிரமணி, தேனித்தொகுதி எம்.பி ரவீந்திரநாத், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், தேனி யூனியன் சேர்மன் சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, கலெக்டர் முரளீதரன் தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரானது 50 அடி தூரம் சென்று கவுமாரியம்மன் கோயிலில் மூலவர் சன்னதிக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டது.இன்று முதல் தெற்குரத வீதி, மேற்குரத வீதி, மின்சார அலுவலகம், போலீஸ் நிலையம் ஆகியவற்றின் சார்பாக தேருக்கு மண்டகப்படி பூஜைகள் நடத்தப்படும். பின்னர் வரும் மே 16ம் தேதி பேரூராட்சி அலுவலகம் முன் நடக்கும் மண்டகப்படியை, தொடர்ந்து அன்று மாலை தேர் நிலைக்கு வரும் கவுமாரியம்மன் முத்து சப்பரத்தில் தேர்தடம் பார்த்தல் நிகழ்ச்சிந டைபெறும்.
தேரோட்ட ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் கலைவாணன், கோயில் செயல் அலுவலர் சுரேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் மற்றும் விழா கமிட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.தேரோட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து கவுமாரியம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!